Settings

முகப்பு/நகரங்கள்/சிறுநீர் கழிக்கக் கூட அனுமதிக்காமல் அறைக்குள் பூட்டு! ஆட்சியர் அலுவலகத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!
நகரங்கள்

சிறுநீர் கழிக்கக் கூட அனுமதிக்காமல் அறைக்குள் பூட்டு! ஆட்சியர் அலுவலகத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

🕒 3 நவ., 2026, 02:58 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சிறுநீர் கழிக்கக் கூட அனுமதிக்காமல் அறைக்குள் பூட்டு! ஆட்சியர் அலுவலகத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •புதுக்கோட்டையில் முதலமைச்சரை சந்திக்க காத்திருந்த தவெக வேட்பாளர் கே.எம். ஷெரீப் உள்ளிட்டோரை அதிகாரிகள் அறைக்குள் வைத்து மூன்று மணி நேரம் பூட்டியதாகப் பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

புதுக்கோட்டையில் முதலமைச்சரை சந்திக்கக் காத்திருந்த தவெக வேட்பாளர் கே.எம். ஷெரீப் உள்ளிட்டோரை அதிகாரிகள் மூன்று மணி நேரம் அறைக்குள் பூட்டி வைத்ததாகப் பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த கே.எம். ஷெரீப், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி என்ற அமை நடத்தி வருபவர். கடந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வாய்ப்பை இழந்தவர். இந்நிலையில், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் புதுக்கோட்டைக்கு வருகை தந்திருந்தார்.

முதலமைச்சரைச் சந்திப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த தன்னை, எந்த வசதியும் இல்லாத ஒரு அறைக்குள் அடைத்து வைத்து மூன்று மணி நேரம் சிறுநீர் கழிக்கக் கூட அனுமதிக்காமல் அவதிப்படச் செய்ததாக கே.எம். ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சரை முறைப்படி சந்திப்பதற்காக அனுமதி சீட்டு பெற்று நானும், எனது கட்சியின் மாவட்டச் செயலாளர் யூசுப் ராஜா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்திரசேகரன் மற்றும் இப்ராஹிம் பாபு ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தோம். அப்போது சிறப்பு பட்டாலியன் பிரிவு எஸ்.பி. ஈஸ்வரனும், புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தை சாமியும் இருக்கை வசதி செய்து தருவதாகக் கூறி எங்களை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஏற்கனவே சில அதிகாரிகளை அமர வைத்துவிட்டு, வெளியில் இருந்து பூட்டு போட்டனர்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியில் பல நிலங்கள் முறைகேடான முறையில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தமிழக அரசுக்கு கடிதம் மூலம் நான் தெரியப்படுத்தியிருந்தேன். இந்த மோசடிக்கு மாவட்ட வருவாய் அலுவலரும் மாவட்ட நிர்வாகமும்தான் முழுக்காரணம். இந்த முறைகேடுகள் குறித்து முதலமைச்சரிடம் மனு அளிக்க நாங்கள் வந்திருப்பதை அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர், எங்களது மனுக்களைப் பறித்துக்கொண்டு அறைக்குள் தள்ளிப் பூட்டிவிட்டார்" என்று குற்றம்சாட்டினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மகளிர் சுய உதவிக் குழுவினரின் பால் உற்பத்தி அலகில் ஆட்சியர் அதிரடி ஆய்வு!நகரங்கள்

மகளிர் சுய உதவிக் குழுவினரின் பால் உற்பத்தி அலகில் ஆட்சியர் அதிரடி ஆய்வு!

Arivazhagan🕒 நவ. 18
வழக்கின் போக்கை மாற்றும் செஞ்சி சிறுமி வழக்கு தடயவியல் ஆய்வு முடிவு இன்று வெளியீடு!நகரங்கள்

வழக்கின் போக்கை மாற்றும் செஞ்சி சிறுமி வழக்கு தடயவியல் ஆய்வு முடிவு இன்று வெளியீடு!

Arivazhagan🕒 நவ. 18
விழுப்புரம் விளையாட்டு வீரர்களுக்கு நற்செய்தி: மைதானத்தை மேம்படுத்த ஆட்சியர் அதிரடி ஆய்வு!நகரங்கள்

விழுப்புரம் விளையாட்டு வீரர்களுக்கு நற்செய்தி: மைதானத்தை மேம்படுத்த ஆட்சியர் அதிரடி ஆய்வு!

Arivazhagan🕒 நவ. 18
137 ஆண்டுகள் கடந்த திருவண்ணாமலை ரயில் நிலையம்: கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்!நகரங்கள்

137 ஆண்டுகள் கடந்த திருவண்ணாமலை ரயில் நிலையம்: கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்!

Srinivasan🕒 நவ. 18
அதிசயம்! பானாம்பட்டு ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால கொற்றவை சிற்பம்!நகரங்கள்

அதிசயம்! பானாம்பட்டு ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால கொற்றவை சிற்பம்!

Arivazhagan🕒 நவ. 18
30 ஆண்டுகளாக அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் இருளர் மக்கள்!செய்திகள்

30 ஆண்டுகளாக அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் இருளர் மக்கள்!

Srinivasan🕒 நவ. 19
கரூர் அருகே துணிகர கொள்ளை: ரூ.7.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு!செய்திகள்

கரூர் அருகே துணிகர கொள்ளை: ரூ.7.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு!

Anandakumar🕒 நவ. 19
செருவங்கி பகுதியில் கழிவுநீர் கால்வாய் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்!செய்திகள்

செருவங்கி பகுதியில் கழிவுநீர் கால்வாய் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்!

Srinivasan🕒 நவ. 19
TNO வாட்ஸ்அப் சானல் ➔