Settings

முகப்பு/நகரங்கள்/சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: ஒருவர் படுகாயம்
நகரங்கள்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: ஒருவர் படுகாயம்

🕒 14 அக்., 2026, 05:30 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: ஒருவர் படுகாயம்
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கங்கர்-சேவல்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உற்பத்தி அறை தரைமட்டமானதுடன் ஒருவர் படுகாயமடைந்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கங்கர்-சேவல்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் உற்பத்தி அறை தரைமட்டமானதோடு, ஒருவர் படுகாயமடைந்தார்.

சாத்தூர் அருகே கங்கர்-சேவல்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான 'கார்த்திகாஸ்' பட்டாசு தொழிற்சாலை, நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. இப்பகுதியில் உள்ள இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் தீபாவளி பண்டிகைக்குத் தேவையான பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் வழக்கம்போல் நடைபெற்று வந்தன.

இன்று பட்டாசுகள் தயாரிக்கத் தேவையான மருந்துகள் வைக்கும் அறையில், மருந்து டின்கள் இறக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லோடு ஏற்றி வந்த வாகனம் முற்றிலும் எரிந்து கருகியதுடன், ஆலையில் இருந்த ஒரு உற்பத்தி அறை முற்றிலுமாக தரைமட்டமானது.

இந்த விபத்தில், மருந்து டின் லோடை இறக்கிய நாரணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த புலித்துரை (25) என்பவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு, சிவகாசி அரசு மருத்துவமனை தீவிர தீக்காய சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔