தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றுள்ளதை அடுத்து, ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 25 முதல் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே அதிகபட்சமாக 55 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மறு உத்தரவு வரும் வரை விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கப்பட மாட்டாது என்றும், மீனவர்கள் தங்கள் உடமைகளையும் படகுகளையும் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்திக் கொள்ளுமாறும் மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
