Settings

முகப்பு/நகரங்கள்/அரசு மருத்துவமனை நுழைவாயிலில் கழிவுநீருடன் தேங்கிய மழைநீர்: நோயாளிகள் கடும் அவதி
நகரங்கள்

அரசு மருத்துவமனை நுழைவாயிலில் கழிவுநீருடன் தேங்கிய மழைநீர்: நோயாளிகள் கடும் அவதி

🕒 24 அக்., 2026, 04:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அரசு மருத்துவமனை நுழைவாயிலில் கழிவுநீருடன் தேங்கிய மழைநீர்: நோயாளிகள் கடும் அவதி
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை நுழைவாயிலில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சேறும் சகதியுமாக உள்ளதால் நோயாளிகள் அவதி.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நுழைவாயிலில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவுநீரால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக, மருத்துவமனை வளாகத்தின் நுழைவாயில் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகள் மருத்துவமனைக்குள் செல்வதில் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

இந்தச் சிக்கலுக்கு உடனடியாகத் தீர்வு காணும்படி துறை சார்ந்த அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔