புளியம்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பெய்த கனமழை காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் இடுப்பளவு வெள்ளநீர் புகுந்துள்ளது. அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய புறவழிச்சாலை 5 அடி உயரத்தில் உயர்த்திக் கட்டப்பட்டதே வடிகால் இன்றி நீர் தேங்குவதற்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தக் பேரிடருக்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் தற்காலிக தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

