ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகவே பரமக்குடி நகராட்சி அலுவலகத்திலும் இந்த ஆய்வு நடைபெறுகிறது.
இந்த சோதனையின் போது, அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து நகராட்சி ஆணையாளர் மற்றும் மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

