Settings

முகப்பு/நகரங்கள்/ஆபத்தான நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம்: பொதுமக்கள் அச்சம்
நகரங்கள்

ஆபத்தான நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம்: பொதுமக்கள் அச்சம்

🕒 23 அக்., 2026, 08:59 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஆபத்தான நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம்: பொதுமக்கள் அச்சம்
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பழைய குயிலத்தில் ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பழைய குயிலம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் உரிய பராமரிப்பின்றி சேதமடைந்து, தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் இயங்கி வருகிறது.

எம்ஜிஆர் சிலை அருகே அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தின் சுவரில் விரிசல்கள் ஏற்பட்டு, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது. இதனால் அப்பகுதி வழியாகச் செல்லும் பொதுமக்களும், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

பெரிய விபத்துகள் நேர்வதற்கு முன்பு, சேதமடைந்த இந்தக் கட்டிடத்தை உடனடியாகச் சீரமைக்கவோ அல்லது புதிய கட்டிடம் கட்டவோ மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔