Settings

முகப்பு/நகரங்கள்/ரூ.20.72 கோடி மதிப்பிலான 43 புதிய கட்டடங்களை அமைச்சர் வெங்கடரமணன் திறந்து வைத்தார்
நகரங்கள்

ரூ.20.72 கோடி மதிப்பிலான 43 புதிய கட்டடங்களை அமைச்சர் வெங்கடரமணன் திறந்து வைத்தார்

🕒 23 அக்., 2026, 07:00 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ரூ.20.72 கோடி மதிப்பிலான 43 புதிய கட்டடங்களை அமைச்சர் வெங்கடரமணன் திறந்து வைத்தார்

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 4 படங்கள்):

✨

AI Highlights

  • •மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.20.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 43 புதிய கட்டடங்களை அமைச்சர் வெங்கடரமணன் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

തുടர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.20.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 43 புதிய கட்டடங்களை அமைச்சர் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, அரசுத்துறை அதிகாரிகள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக, மாணவிகளுடன் இணைந்து அமைச்சர் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔