Settings

முகப்பு/நகரங்கள்/புதிய பேருந்து நிலையம் பின்புறம் மருத்துவக் கழிவுகள் எரிப்பு - பொதுமக்கள் அச்சம்
நகரங்கள்

புதிய பேருந்து நிலையம் பின்புறம் மருத்துவக் கழிவுகள் எரிப்பு - பொதுமக்கள் அச்சம்

🕒 13 அக்., 2026, 09:45 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
புதிய பேருந்து நிலையம் பின்புறம் மருத்துவக் கழிவுகள் எரிப்பு - பொதுமக்கள் அச்சம்
✨

AI Highlights

  • •விருதுநகர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் மருத்துவ மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் கூரைக்கூண்டு ஊராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையத்தின் பின்பகுதியில், மருத்துவ மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் அப்பகுதியில் கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில்வே பாலத்திற்கு கீழே முகக்கவசங்கள் (masks), தலைக்கவசங்கள் (headmasks), கையுறைகள் (gloves) போன்ற மருத்துவக் கழிவுகளும், பல்வேறு தொழிற்சாலைக் கழிவுகளும் தொடர்ச்சியாகக் கொட்டப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்தக் கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்படுவதால் அப்பகுதி மக்களிடையே கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இதுகுறித்து கூரைக்கூண்டு ஊராட்சி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி கழிவுகளைக் கொட்டுவோர் மீது தீவிரக் கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. கழிவுகளைக் கொட்டுவோர் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும். மேலும், தற்போது இந்தப் பகுதியில் தேங்கியுள்ள கழிவுகள் உடனடியாக அகற்றப்பட்டு, அப்பகுதி தூய்மைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔