Settings

முகப்பு/நகரங்கள்/ஆம்பூர் அருகே பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நபர் கைது
நகரங்கள்

ஆம்பூர் அருகே பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நபர் கைது

🕒 14 அக்., 2026, 05:40 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஆம்பூர் அருகே பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நபர் கைது
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (25). கோவிந்தசாமியின் மகனான இவர், தனது செல்பேசியைப் பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து, அவற்றை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வடிவில் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கௌரி என்பவர் அளித்த புகாரின் பேரில், ஆம்பூர் கிராமிய காவல் துறைையினர் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனைக் கைது செய்தனர். அவரிடமிருந்த செல்பேசியை ஆய்வு செய்தபோது, அவர் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து பதிவேற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வாணியம்பாடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔