கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருப்பத்தூரில் அகல்விளக்குகள் மற்றும் பூக்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகள், கோயில்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் அகல்விளக்கேற்றி வழிபடுவது பாரம்பரிய வழக்கமாகும். இதற்காகப் பொதுமக்கள் மண் அகல்விளக்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் காய்கறி சந்தை அருகே விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ள மண் அகல்விளக்குகளைப் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
பல்வேறு அளவுகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அகல்விளக்குகளை மக்கள் தங்களது தேவைக்கேற்பத் தேர்வு செய்து வாங்கிச் செல்கின்றனர். இதேபோல், தீப வழிபாட்டிற்குத் தேவையான பூக்கள், பூஜைப் பொருட்கள் மற்றும் எண்ணெய் வகைகளையும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி வருகின்றனர். இதனால் திருப்பத்தூர் பூ மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அள்ளி வழிகிறது.
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அகல்விளக்குகள், பூக்கள் மற்றும் பூஜைப் பொருட்களின் வியாபாரம் சூடுபிடித்துள்ளதால், வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.









