Settings

முகப்பு/நகரங்கள்/137 ஆண்டுகள் கடந்த திருவண்ணாமலை ரயில் நிலையம்: கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்!
நகரங்கள்

137 ஆண்டுகள் கடந்த திருவண்ணாமலை ரயில் நிலையம்: கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்!

🕒 18 நவ., 2026, 02:59 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
137 ஆண்டுகள் கடந்த திருவண்ணாமலை ரயில் நிலையம்: கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •பஞ்சபூதத் தலமான திருவண்ணாமலை ரயில் நிலையம் தனது 137-வது பிறந்தநாளைக் கொண்டாடியது. தென்னக ரயில்வே சார்பில் கேக் வெட்டி, புகைப்படக் கண்காட்சியுடன் விழா கோலாகலமாக நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை ரயில் நிலையம் தனது 137-வது பிறந்தநாளைக் கொண்டாடியது.

கடந்த 1889ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரயில் நிலையம், அன்று முதல் இன்று வரை பல்வேறு பரிமாணங்களை எட்டியுள்ளது. குறிப்பாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களையும், பௌர்ணமி கிரிவலத்தின்போது பல்லாயிரக்கணக்கான பயணிகளையும் கையாளும் முக்கிய மையமாக இது திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை ரயில் நிலையம் தொடங்கப்பட்டு 137 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தென்னக ரயில்வே அதிகாரிகள் சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டங்கள் நடைபெற்றன. மேலும், அன்றைய காலம் முதல் தற்போது வரை தென்னக ரயில்வேயின் வளர்ச்சிப் பயணத்தைக் விவரிக்கும் புகைப்படக் கண்காட்சியும், பழங்கால ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட டெலிபோன் உள்ளிட்ட உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக வந்தே மாதரமும், அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களிடையே இது சலசலப்பை ஏற்படுத்தியது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமிநகரங்கள்

பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

JOWIN AKASH🕒 நவ. 21
திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!நகரங்கள்

திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!

MSD🕒 நவ. 21
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔