Settings

முகப்பு/நகரங்கள்/முழு உடல்தானம் செய்த 8 பேருக்கு அடையாள அட்டை வழங்கல்!
நகரங்கள்

முழு உடல்தானம் செய்த 8 பேருக்கு அடையாள அட்டை வழங்கல்!

🕒 13 அக்., 2026, 05:25 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
முழு உடல்தானம் செய்த 8 பேருக்கு அடையாள அட்டை வழங்கல்!
✨

AI Highlights

  • •அரியலூர் மாவட்டத்தில் முழு உடல்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்த 8 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி அடையாள அட்டைகள் மற்றும் பதிவுச் சான்றிதழ்களை வழங்கினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் முழு உடல்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்த 8 நபர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் பதிவுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி வழங்கினார்.

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ ஆய்வுக் கூடத்திற்கு இயற்கை மரணத்திற்குப் பின் தமது முழு உடலை வழங்குவதற்கு முன்பதிவு செய்துள்ள மற்றும் உடல் உறுப்பு தானம் செய்துள்ள இவர்களுக்கு இச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உடல் உறுப்பு தானம் தொடர்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ராம்கணேஷ், நிலைய மருத்துவ அலுவலர் மரு.கொளஞ்சிநாதன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔