கோவை காந்தி பார்க் முருகன் கோவிலில், மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளை அமல்படுத்தக் கோரி இந்து மக்கள் கட்சியினர் 58 தேங்காய் உடைத்து சிறப்பு வேண்டுதலில் ஈடுபட்டனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் வருகிற கார்த்திகை தீபத் திருநாளன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த வழிபாடு நடத்தப்பட்டது. இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், மாநிலச் செயலாளர் சூர்யா மற்றும் செல்வபுரம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
முருகப்பெருமானிடம் சிறப்பு வேண்டுதல் நடத்திய பின்னர் 58 தேங்காய்களை உடைத்து அவர்கள் வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாகத் தனது கருத்துகளையும் கோரிக்கைகளையும் தெரிவித்தார்.

