திருவள்ளூர் மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருவதால், திருவள்ளூரிலிருந்து சென்னை, திருப்பதி மற்றும் பெங்களூரு செல்லும் மார்க்கங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சாலைப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதே இந்தத் தொடர் போக்குவரத்து நெரிசலுக்குக் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் பள்ளி வாகனங்கள், அவசர சிகிச்சைக்குச் செல்லும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாலைப் பணிகளைத் துரிதப்படுத்தினால் மட்டுமே இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண முடியும் என்றும், பொதுமக்கள் அச்சமின்றி பயணிக்க வழிவகை பிறக்கும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

