திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட நான்கு மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 174 கிலோ கஞ்சா, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நாங்குநேரியில் உள்ள எரியூட்டும் மையத்தில் அழிக்கப்பட்டது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் உத்தரவின்படி, கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களுக்கு எதிராக காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, நான்கு மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட 174 கிலோ கஞ்சா, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (DIG) திருநாவுக்கரசு மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் சாஸ்திரி ஆகியோர் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது.









