Settings

முகப்பு/நகரங்கள்/ஆணையாளரை கண்டித்து தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
நகரங்கள்

ஆணையாளரை கண்டித்து தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

🕒 14 அக்., 2026, 08:00 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஆணையாளரை கண்டித்து தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில், ஆணையாளர் மற்றும் நகரமைப்பு அலுவலரை பணியிட மாற்றம் செய்யக்கோரி தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில், நகர்மன்றத் தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி ஆணையாளர் மற்றும் நகரமைப்பு அலுவலருக்கு எதிராக இந்தக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றக் கூட்டம் தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நகராட்சி ஆணையாளர் குமார் தொடர்ந்து கூட்டங்களைப் புறக்கணிப்பதாகவும், கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஏதேனும் ஒரு காரணம் காட்டி நிராகரிப்பதாகவும், ஆனால் அவர் விரும்பும் தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றிக் கொள்வதாகவும் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், நகர்மன்றத்தை மதிக்காமல் ரீல்ஸ் வெளியிடுபவர்களுடன் இணைந்து கொண்டு, ஒரு அதிகாரியாகச் செயல்படாமல் அரசியல்வாதியைப் போலச் செயல்படுவதாக ஆணையாளர் மீது அனைத்து கவுன்சிலர்களும் ஒருமித்த குரலில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனையடுத்து, ஆணையாளர் குமார் மற்றும் நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்யக் கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தக் கண்டனத் தீர்மானம் தலைவரால் முன்மொழியப்பட்டு, துணைத் தலைவரால் வழிமொழியப்பட்டு, நகர்மன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் கூட்டப் பொருளாக வைக்கப்பட்டுள்ள 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. இதனிடையே, கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஆணையாளர் குமாரைக் கண்டித்தும், மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் வரும் வரை நகர்மன்றத் தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔