நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியைத் தொடர்ந்து, ஒரு நாள் கருத்தரங்கம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் சமூக வலைத்தளங்களுக்கான காணொளிகள் (ரீல்ஸ்) மற்றும் புகைப்பட எடுப்பதில் ( போட்டோ சூட்) நேரத்தைச் செலவிட்டதால், அரங்கில் காத்திருந்த மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்தச் சம்பவம் குறித்துக் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, கல்லூரியில் திட்டமிடப்பட்டிருந்த கருத்தரங்கம் உரிய நேரத்தில் தொடங்கப்படவில்லை. இதனால் நிகழ்ச்சிக்காகக் காத்திருந்த மாணவிகள் நீண்ட நேரம் சிரமத்தை எதிர்கொண்டனர்.




