தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளைக் கண்டறிந்து தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் புதிய தொழில்நுட்ப முறை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், அதிக வேகத்தில் செல்பவர்கள் மற்றும் காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்பவர்களைக் கண்டறிந்து தானியங்கிக் கருவிகள் மூலம் அபராதம் விதிக்கப்படும்.
வாகன ஓட்டிகள் அனைவரும் உரிய போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பாகப் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

