சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/வணிகம்/4 மணி நேரத்தில் எல்பிஜி சிலிண்டர்: BPCL-ன் புதிய பாரத்கேஸ் லைட் ZIP!
வணிகம்

4 மணி நேரத்தில் எல்பிஜி சிலிண்டர்: BPCL-ன் புதிய பாரத்கேஸ் லைட் ZIP!

The News Outlook
🕒 1 ஆக., 2026, 05:45 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
4 மணி நேரத்தில் எல்பிஜி சிலிண்டர்: BPCL-ன் புதிய பாரத்கேஸ் லைட் ZIP!

AI Highlights

  • பாரத் பெட்ரோலியம் சென்னை மற்றும் கோவையில் 4 மணி நேரத்தில் LPG சிலிண்டர் விநியோகிக்கும் 'பாரத்கேஸ் லைட் ZIP' சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

இந்தியாவின் முன்னணி எரிசக்தி நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL), வாடிக்கையாளர்களுக்கு விரைவான மற்றும் எளிமையான முறையில் LPG சேவையை வழங்கும் நோக்கில் சென்னை மற்றும் கோவையில் ‘பாரத்கேஸ் லைட் ZIP’ என்ற புதிய பிரீமியம் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய சேவையை, BPCL தெற்கு மண்டல LPG பிரிவு தலைவர் திரு. மகேஷ் குமார் எஸ். (Shri. Magesh Kumar S) மற்றும் தமிழ்நாடு LPG மார்க்கெட்டிங் துணைப் பொது மேலாளர் திரு. ரமண குமார் (Shri. Ramana Kumar) ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் புதிய LPG இணைப்புக்கு விண்ணப்பித்தால், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் கிடைத்த பின்னர் 4 மணி நேரத்திற்குள் சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத்கேஸ் லைட் ZIP சேவையில், புதிய LPG இணைப்புடன், 4 மணி நேர சிலிண்டர் விநியோகம், எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய இலகுரக காம்போசிட் சிலிண்டர், துருப்பிடிக்காத வசதி மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த சேவை முதற்கட்டமாக நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 30 நகரங்களில் செயல்பாட்டில் உள்ள இத்திட்டம், வரும் ஆகஸ்ட் 15-க்குள் மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. 

தொடர்ந்து, நாடு முழுவதும் 100 நகரங்களுக்கு சேவை விரிவாக்கப்படும் என BPCL தெரிவித்துள்ளது.



Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...