Settings

முகப்பு/விவசாயம்/குளம் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள்! திருவாரூரில் கண்ணீரில் விவசாயிகள்
விவசாயம்

குளம் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள்! திருவாரூரில் கண்ணீரில் விவசாயிகள்

🕒 21 அக்., 2026, 08:48 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
குளம் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள்! திருவாரூரில் கண்ணீரில் விவசாயிகள்
✨

AI Highlights

  • •திருவாரூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஓவர்சேரி உள்ளிட்ட 7 கிராமங்களில் 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவாரூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்காக கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நேரடி விதைப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, ஓவர்சேரி, கோவில்பத்து, அண்டூர், வேர்க்குடி, தண்ணீர்குண்ணம், சாத்தங்குடி உள்ளிட்ட 7 கிராமங்களில் நேரடி விதைப்பு செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேல் ஆன சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் கனமழையால் இக்கிராமங்களில் உள்ள சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி குளம் போல் காட்சியளிக்கின்றன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔