Settings

முகப்பு/விவசாயம்/திருவாரூர்: 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது
விவசாயம்

திருவாரூர்: 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது

🕒 21 அக்., 2026, 12:32 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருவாரூர்: 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது
✨

AI Highlights

  • •திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் கோட்டூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவாரூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 18-ஆம் தேதி பெய்த பலத்த மழையின் காரணமாக நேரடி விதைப்பு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் முற்றிலும் மழைநீரில் மூழ்கின. கோட்டூர் வட்டாரத்திற்கு உட்பட்ட வேர்க்குடி, ஓவச்சேரி மற்றும் கோவில்பத்து உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 500 ஏக்கருக்கும் அதிகமான சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை வேளாண் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔