Settings

முகப்பு/விவசாயம்/கோலாகலமாகத் தொடங்கியது மாபெரும் விவசாயக் கண்காட்சி: எஸ்.பி.வேலுமணி தொடக்கி வைத்தார்
விவசாயம்

கோலாகலமாகத் தொடங்கியது மாபெரும் விவசாயக் கண்காட்சி: எஸ்.பி.வேலுமணி தொடக்கி வைத்தார்

🕒 10 அக்., 2026, 07:11 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோலாகலமாகத் தொடங்கியது மாபெரும் விவசாயக் கண்காட்சி: எஸ்.பி.வேலுமணி தொடக்கி வைத்தார்
✨

AI Highlights

  • •கோவையில் மூன்று நாட்கள் நடைபெறும் மாபெரும் விவசாயக் கண்காட்சியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கோவையில் மூன்று நாட்கள் நடைபெறும் மாபெரும் விவசாயக் கண்காட்சி இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இக்கண்காட்சியை முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் முறைப்படி தொடக்கி வைத்தார்.

கோவையின் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பாஜக மாநில விவசாயப் பிரிவு தலைவர் ஜி.கே.நாகராஜ், பாஜக கோவை மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் மற்றும் இராஜலட்சுமி திருமண மண்டப உரிமையாளர் பி.நடராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

கண்காட்சியைத் தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரங்குகளைப் பார்வையிட்டார். குறிப்பாக, விவசாயத்திற்குப் பயன்படும் நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்முறைகள் குறித்து வல்லுநர்களிடம் கேட்டறிந்தார். மேலும், இயற்கை விவசாயப் பொருட்கள், தேன் மற்றும் குல்கந்து உள்ளிட்ட பாரம்பரிய உணவுப் பொருட்களையும் அவர் பார்வையிட்டார்.

விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கவும், புதிய விவசாய தொழில்நுட்பங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடனும் தொடங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியில் ஏராளமான பொதுமக்களும் விவசாயிகளும் ஆர்முடன் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔