Settings

முகப்பு/விவசாயம்/70,000 மெட்ரிக் டன் நெல் தேக்கம்: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார்
விவசாயம்

70,000 மெட்ரிக் டன் நெல் தேக்கம்: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார்

🕒 22 அக்., 2026, 01:49 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
70,000 மெட்ரிக் டன் நெல் தேக்கம்: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார்

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 4 படங்கள்):

✨

AI Highlights

  • •மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சம்பா மற்றும் குறுவை பருவ நெல் கொள்முதலில் 70,000 மெட்ரிக் டன் நெல் அரவைக்கு அனுப்பப்படாமல் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய விவசாயி இளம்பரிதி, கடந்த சம்பா பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 15,000 மெட்ரிக் டன் நெல் மற்றும் தற்போதைய குறுவை பருவ நெல் உட்பட மொத்தம் 70,000 மெட்ரிக் டன் நெல் அரவைக்கு அனுப்பப்படாமல் தேக்கமடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

விவசாயி இளம்பரிதி மேலும் தெரிவிக்கையில், கடந்த சம்பா பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்டு இயக்கம் செய்யப்படாமல் இருந்த 40,000 மெட்ரிக் டன் நெல்லில், 25,000 மெட்ரிக் டன் மட்டுமே அரவைக்காக அனுப்பப்பட்டதாகவும், எஞ்சிய 15,000 மெட்ரிக் டன் நெல் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், தற்போதைய குறுவை பருவத்தில் 55,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 3,000 முதல் 5,000 மூட்டைகள் வரை தேக்கமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

நாள்பட்ட நெல் மூட்டைகளை அரவை செய்து விநியோகிக்கும்போது அரிசியில் நாற்றம் அடிப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதிகாரிகளின் இந்தச் செயலால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உடனடியாக இந்த நெல்லை அரவைக்கு அனுப்பி, பொதுமக்களுக்குத் தரமான அரிசியை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔