கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் தேயிலை ஆலை பகுதியில் காட்டு யானைக்கூட்டம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிச் சென்றது.
அப்போது அந்த யானைகள் எழுப்பிய பிளிறல் சத்தத்துடன் அப்பகுதியை விட்டு நகர்ந்தன. இந்தச் காட்சியை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் காணொலியாகப் பதிவு செய்தனர். தற்போது இந்தக்காணொலி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.









