Settings

முகப்பு/தமிழ்நாடு/முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

🕒 23 அக்., 2026, 05:53 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
✨

AI Highlights

  • •முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் நீர்வரத்து 4,271 கன அடியாக உயர்ந்துள்ளதால் ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,271.30 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்து உயர்வு தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் போதிய மழையின்றி நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவு பன்மடங்கு உயர்ந்துள்ளது.

நேற்று வினாடிக்கு 2,488 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது அதிகரித்து வினாடிக்கு 4,271.30 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையின் தற்போதைய நிலவரப்படி, நீர்மட்டம் 119.75 அடியாகவும், நீர் வெளியேற்றம் 400 கன அடியாகவும், மொத்த நீர் இருப்பு 2,583 மில்லியன் கன அடியாகவும் பதிவாகியுள்ளது.

அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔