Settings

முகப்பு/தமிழ்நாடு/பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுநீர்
தமிழ்நாடு

பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுநீர்

🕒 18 அக்., 2026, 05:37 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுநீர்
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி இடையே பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதால் நீர் மாசடைந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், அப்பகுதிகளில் இயங்கும் சில தனியார் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர், பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படாமல் நேரடியாக பாலாற்றில் விடப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் இடையே அமைந்துள்ள மாராப்பட்டு பகுதியில், பாலாற்று நீர் துர்நாற்றத்துடனும் அதிக நுரையுடனும் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழைக்காலங்களில் தொழிற்சாலைக் கழிவுகள் நேரடியாக ஆற்றில் விடப்படுவதால், ஆற்றுப் படுக்கையில் உள்ள விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த மாசடைந்த நீரால் அப்பகுதியில் விவசாயம் செய்யும் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மனிதர்களும் கால்நடைகளும் அதைப் பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகமும் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் உடனடியாகத் தலையிட்டு ஆய்வு நடத்த வேண்டும் என்றும், பாலாற்றில் கழிவுநீரைத் திறக்கும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாய சங்கங்களும் பாலாறு பாதுகாப்பு இயக்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔