கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பேருந்து நிலையம் - பாம்பார்புரம் சாலையில் ராட்சச மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக 7 ரோடு, பிடி சாலை மற்றும் அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாற்றுப் பாதைகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தகவலறிந்ததும் மின்வாரிய ஊழியர்களும் சமூக ஆர்வலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலையில் முறிந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

