சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/விளையாட்டு/10 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை: நோபல் உலக சாதனை!
விளையாட்டு

10 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை: நோபல் உலக சாதனை!

The News Outlook
🕒 13 ஆக., 2026, 07:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
10 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை: நோபல் உலக சாதனை!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை முன்னிட்டு, விருதுநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தொடர்ந்து 10 மணி நேரம் 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி ‘நோபல் உலக சாதனை’ (Noble World Record) படைத்துள்ளார்.

விருதுநகரில் இயங்கி வரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர் அருணேஷ் இச்சாதனை நிகழ்வில் ஈடுபட்டார். எவ்வித உணவு இடைவேளையோ அல்லது இயற்கை உபாதைகளுக்கான இடைவெளியோ இன்றி, தொடர்ச்சியாக 10 மணி நேரம் 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி உலக சாதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

சாதனை நேரத்திற்குப் பிறகும், இரட்டைக் கம்பு, சுருள்வாள், மான்கொம்பு, அலங்கார சிலம்பம் மற்றும் வாள்-கேடயம் வீச்சு போன்ற பாரம்பரிய தற்காப்புக் கலைச் செய்முறைகளைத் திறம்படச் செய்து காட்டிப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். இச்சாதனையை நிகழ்த்திய மாணவர் அருணேஷைக் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு மனதாரப் பாராட்டினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔