Settings

முகப்பு/ஆன்மீகம்/திருப்பதி: ஒரே நாளில் ரூ.5.33 கோடி உண்டியல் காணிக்கை!
ஆன்மீகம்

திருப்பதி: ஒரே நாளில் ரூ.5.33 கோடி உண்டியல் காணிக்கை!

🕒 7 அக்., 2026, 09:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருப்பதி: ஒரே நாளில் ரூ.5.33 கோடி உண்டியல் காணிக்கை!
✨

AI Highlights

  • •திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் ரூ.5.33 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 73 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் ரூ.5 கோடியே 33 லட்சம் உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது.

73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று 73 ஆயிரத்து 629 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், 27 ஆயிரத்து 525 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

அன்று கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணியதில் மொத்தம் ரூ.5 கோடியே 33 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

3.91 லட்சம் லட்டுகள் விற்பனை

திருப்பதி கோவிலில் நேற்று 3 லட்சத்து 91 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், 1 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர்.

அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 334 பேர் மருத்துவ சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்துக்குச் சென்ற பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய சுமார் 12 மணி நேரம் வரை காத்திருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔