சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/ஆன்மீகம்/பழனி ஆனந்த விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு!
ஆன்மீகம்

பழனி ஆனந்த விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு!

🕒 14 செப்., 2026, 06:15 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பழனி ஆனந்த விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு!

AI Highlights

  • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆனந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கணபதி ஹோமம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பழனி மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஆனந்த விநாயகருக்கு இன்று (14.09.2026) அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக் கவசம் மற்றும் வண்ண மலர் மாலைகள் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. உலக நன்மை மற்றும் பக்தர்களின் நலன் வேண்டி சிறப்பு கணபதி ஹோமமும் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு பிராமண சமாஜம் மாநிலத் தலைவர் ஹரிஹர முத்து ஐயர் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாட்டில், அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உள்ளூர், வெளியூர் பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் ஆனந்த விநாயகரை தரிசித்து வழிபட்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔