Settings

முகப்பு/ஆன்மீகம்/காசி முதல் ராமேஸ்வரம் வரை! திருப்பத்தூரில் ஒரே இடத்தில் 12 ஜோதிர்லிங்க தரிசனம் செய்து பக்தர்கள் பக்திப் பரவசம்!
ஆன்மீகம்

காசி முதல் ராமேஸ்வரம் வரை! திருப்பத்தூரில் ஒரே இடத்தில் 12 ஜோதிர்லிங்க தரிசனம் செய்து பக்தர்கள் பக்திப் பரவசம்!

🕒 18 நவ., 2026, 08:51 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காசி முதல் ராமேஸ்வரம் வரை! திருப்பத்தூரில் ஒரே இடத்தில் 12 ஜோதிர்லிங்க தரிசனம் செய்து பக்தர்கள் பக்திப் பரவசம்! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் நகரில் வைசியர்கள் சங்க திருமண மண்டபத்தில் 12 ஜோதிர்லிங்கங்கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்து தரிசனம் செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள வைசியர்கள் சங்க திருமண மண்டபத்தில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற 12 ஜோதிர்லிங்கங்கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மண்டபத்திற்கு வருகை தடுத்து ஜோதிர்லிங்கங்களை தரிசித்தனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பக்தர்கள் தாங்களாகவே புனித நீரை ஊற்றி ஒவ்வொரு ஜோதிர்லிங்கத்திற்கும் அபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபட்டனர். இந்த ஆன்மிக நிகழ்வில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கூறுகையில், "இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் அமைந்துள்ள புகழ்பெற்ற 12 ஜோதிர்லிங்கங்களான குஜராத்தில் உள்ள சோமநாதர் மற்றும் நாகேஸ்வரர், ஆந்திரப் பிரதேசத்தின் மல்லிகார்ஜுனர், மத்தியப் பிரதேசத்தின் மகாகாளேஸ்வரர் மற்றும் ஓங்காரேஸ்வரர், உத்தரகாண்டின் கேதார்நாத், உத்தரப் பிரதேசத்தின் காசி விஸ்வநாதர், மகாராஷ்டிராவின் பீமாசங்கர், திரியம்பகேஸ்வரர் மற்றும் கிருஷ்ணேஸ்வரர், ஜார்க்கண்டின் வைத்தியநாதர் மற்றும் தமிழ்நாட்டின் ராமநாதசுவாமி ஆகிய 12 ஜோதிர்லிங்கங்களும் பக்தர்களின் தரிசனத்திற்காக ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன" என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், "திருச்சி மாவட்டம் சீராத்தோப்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் சிவன் கோவிலில், வருகிற பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அந்தக் கோவிலில் இந்த 12 ஜோதிர்லிங்கங்களும் மூலவர்களாக அமைக்கப்பட உள்ளன. இதற்கான முன்னோட்டமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் இந்த 12 ஜோதிர்லிங்கங்களைக் கொண்டு சென்று, பொதுமக்கள் தாங்களே கைகளால் அபிஷேகம் செய்து வழிபடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆன்மிக நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

ஒரே இடத்தில் 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசனம் செய்து, தங்களது கைகளாலேயே புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யும் அரிதான வாய்ப்பு கிடைத்ததால் திருப்பத்தூர் பகுதி பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!ஆன்மீகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

manimaran🕒 நவ. 21
திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்ஆன்மீகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்

manimaran🕒 நவ. 21
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்ஆன்மீகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்

Ramkumarsamy🕒 நவ. 21
ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!ஆன்மீகம்

ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!

Dinesh🕒 நவ. 21
கார்த்திகை முதல் சனிக்கிழமை - விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்ஆன்மீகம்

கார்த்திகை முதல் சனிக்கிழமை - விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்

ARAVINDHAN🕒 நவ. 21
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔