Settings

முகப்பு/ஆன்மீகம்/சரணம் ஐயப்பா! கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி கருப்பத்தூர் ஐயப்பன் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
ஆன்மீகம்

சரணம் ஐயப்பா! கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி கருப்பத்தூர் ஐயப்பன் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

🕒 17 நவ., 2026, 07:58 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சரணம் ஐயப்பா! கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி கருப்பத்தூர் ஐயப்பன் கோவிலில் குவிந்த பக்தர்கள்! - படம் 1 - The News Outlook
📸1 / 8
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (8)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, கரூர் கருப்பத்தூர் ஐயப்பன் கோவிலில் 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து மண்டல விரதத்தைத் தொடங்கினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கரூர் மாவட்டம், கருப்பத்தூரில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள தமிழகத்தின் முதல் ஐயப்பன் கோவிலில், கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து தங்களது மண்டல விரதத்தைத் தொடங்கினர்.

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள புகழ்பெற்ற இந்தக் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவது வழக்கம். இதையொட்டி, இன்று காலை கருப்பத்தூர், லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், புனவாசிப்பட்டி, அய்யர்மலை மற்றும் திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை, முசிறி, தொட்டியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, கருப்பு வேஷ்டி அணிந்து, குருசாமிகளின் முன்னிலையில் மாலை அணிந்து கொண்டனர். 'சரணம் ஐயப்பா' என்ற பக்தி முழக்கத்துடன் கோவில் வளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. முதன்முறையாக சபரிமலைக்குச் செல்லும் கன்னி சாமிகள் பலரும் இதில் பங்கேற்றனர். இதேபோல், குளித்தலை ஐயப்பன் கோவிலிலும் 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!ஆன்மீகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

manimaran🕒 நவ. 21
திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்ஆன்மீகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்

manimaran🕒 நவ. 21
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்ஆன்மீகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்

Ramkumarsamy🕒 நவ. 21
ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!ஆன்மீகம்

ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!

Dinesh🕒 நவ. 21
கார்த்திகை முதல் சனிக்கிழமை - விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்ஆன்மீகம்

கார்த்திகை முதல் சனிக்கிழமை - விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்

ARAVINDHAN🕒 நவ. 21
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔