பிரபல திரைப்பட நடிகை கௌதமி, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.
கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சம்பந்த விநாயகர், அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் சன்னிதிகளுக்குச் சென்ற நடிகை கௌதமி, அங்கு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
வழிபாட்டிற்குப் பிறகு, கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு பிரசாதங்களும், மாலைகளும் வழங்கப்பட்டன.









