Settings

முகப்பு/ஆன்மீகம்/மயிலாடுதுறை அருகே ஆக்கூரில் உள்ள ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்:
ஆன்மீகம்

மயிலாடுதுறை அருகே ஆக்கூரில் உள்ள ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்:

🕒 25 அக்., 2026, 02:03 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று சிவன் ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதனால் உணவு பஞ்சம் நீங்கும் என்பது ஐதீகம். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வாள் நெடுங்கண்ணி உடனாகிய ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. முற்கால சோழ மன்னர்களின் ஒருவரும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவருமான கோச்செங்கட் சோழ மன்னனால் அமைக்கப்பட்ட மாடக் கோயில்களில் ஒன்றான இக்கோவிலில் சுவாமி தானாக தோன்றியதால் தான்தோன்றிஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட 18 வகை பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 15 கிலோ (அரிசி சாதம்) அன்னம் கொண்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று சுவாமிக்கு அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு , மகா தீபாராதனை மற்றும் சோடசதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்த அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔