வற்றாத ஜீவநதியான தாமிரபரணி பாபநாசம் தொடங்கி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் சமவெளிகளில் சுமார் 96 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்று புன்னக்காயல் அருகே மன்னார் வளைகுடாவில் (வங்காள விரிகுடா) கலக்கிறது. இருப்பினும் இந்த ஆற்றில் கலக்கும் சுத்திகரிக்கப்படாத மாநகராட்சி கழிவு நீர் மற்றும் திடக்கழிவுகளின் தொடர்ச்சியான வெளியேற்றம் காரணமாக அந்த நீரின் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தகவல்களின் அடிப்படையில் தாமிரபரணியில் மலக்கழிவு பாக்டீரியா மற்றும் நுண்கிருமிகள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவில் கலப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய ஆற்று பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சுமார் 52 கோடி செலவழித்த போதிலும் சுமார் 80 சதவீத கழிவுநீர் இன்னும் தாமிரபரணி ஆற்றில் கலப்பதாக நெல்லை மாநகராட்சி ஒப்புக்கொண்டுள்ளது. நிலத்தடி கழிவுநீர் வடிகால் திட்டங்கள் தாமதமாக செய்யப்படுவதாலும், 2023 ம் ஆண்டு வெள்ளத்திற்கு பின் தற்காலிக செயல்பாடுகள் செயலிழந்ததாலும், அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் கல்லிடைக்குறிச்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுமையாக செயல்படாமல் உள்ளன. இதன் அடிப்படையில் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீரை சுத்தப்படுத்த இரட்டை மின் பகுப்பான் மூலம் இயக்கப்படும் மூன்று ஒருங்கிணைந்த மின் வேதியியல் செயல்முறைகளை திரட்டி கழிவுநீரை நேரடியாக சுத்தப்படுத்தி அதன் நோய்க் கிருமிகளை அழித்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட நிர்வாகமும் நெல்லை மாநகராட்சி நிர்வாகமும் தாமிரபரணி ஆற்றை அடையும் முன்பே கழிவுநீரை சுத்திகரிக்கும் ரசாயனமற்ற மின்வேதியியல் தொழில்நுட்பத்தை செயல்படுத்திட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை யூனிசென் ஹோல்டிங் பிரைவேட் நிறுவனம் சார்பில் இன்று அதற்கான மாதிரி செயல்பாடுகள் சிந்து பூந்துறை நவீன எரிவாயு தகனமேடை அருகே நடத்தப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிவுரையான "மாசுபடுத்துபவரே செலுத்துக" என்ற கொள்கையின் அடிப்படையில் சிஎஸ்ஆர் நிதியுதவியுடன் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை உடனடியாகத் தடுக்க இத்தொழில்நுட்பம் வழிவகுக்கிறது. இதன் அடிப்படையில் தாமிரபரணி ஆற்றில் தொழில்நுட்ப இயந்திரங்கள் பொருத்தப்பட்டு கழிவு நீரை சுற்றிய சுத்திகரித்து நன்னீராக மாற்றி மீண்டும் ஆற்றுக்குள் விட நிறுவனம் ஒப்புக்கொண்டு உள்ளது இதற்காக ஒரு லிட்டர் தண்ணீருக்கு ரூ.15 பைசா முதல் 45 பைசா வசூலிக்கப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் பத்தமடை டவுன் பஞ்சாயத்தில் இலவசமாக செய்து கொடுக்கப்பட உள்ளது. திட்டத்தின் வெற்றி அடிப்படையில் மற்ற நகராட்சிகள் மாநகராட்சிகள் டவுன் பஞ்சாயத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான மாதிரி செயல்பாடுகள் அறிமுக விழா நெல்லை சிந்து பூந்துறை நவீன எரிவாயு தகனமேடை அருகே நடந்தது. இதில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி எம்பி ராபர்ட் புரூஸ், சென்னை இணை தலைமை சுற்றுச்சூழல் ஓய்வு பெற்ற பொறியாளர் சார்லஸ் ரொட்ரிகோ, நெல்லை மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் அசோக் குமார், உதவி செயற்பொறியாளர் அலெக்ஸாண்டர், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரசியல்
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீரை சுத்திகரிக்க ரசாயனமற்ற மின் வேதியியல் தொழில்நுட்பம்
🕒 28 ஆக., 2026, 08:58 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
