Settings

முகப்பு/அரசியல்/கிணத்துக்கடவு கோதவாடி குளம் சுத்தம் செய்த வீ தா லீடர்ஸ் அமைப்பினர்
அரசியல்

கிணத்துக்கடவு கோதவாடி குளம் சுத்தம் செய்த வீ தா லீடர்ஸ் அமைப்பினர்

🕒 9 அக்., 2026, 11:39 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கிணத்துக்கடவு கோதவாடி குளம் சுத்தம் செய்த வீ தா லீடர்ஸ் அமைப்பினர்
✨

AI Highlights

  • •கிணத்துக்கடவு கோதவாடி குளம் சுத்தம் செய்த வீ தா லீடர்ஸ் அமைப்பினர்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 312 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் ஜீவாதாரமான கோதவாடி குளம், பராமரிப்பின்றி அழிவின் விளிம்பில் உள்ளது. ஒரு காலத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் (PAP) உபரி நீரால் நிரம்பி, சுற்றியுள்ள பல கிராமங்களின் விவசாயத்தையும், நிலத்தடி நீர்மட்டத்தையும் காத்த இந்த குளம், இன்று பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தனது கொள்ளளவை இழந்து நிற்கிறது. குளம் முழுவதும் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. கரைகள் பலமிழந்து, குப்பைகள் சூழ்ந்து பாரம்பரிய நீர்நிலையின் அடையாளத்தை இழந்துள்ளது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த குளம் நிரம்பியபோது விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் தூர்வாரப்படாததால் நீர் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. இந்நிலையில், குளத்தை மீட்கும் முயற்சியாக வீ தா லீடர்ஸ் அமைப்பினர் களத்தில் இறங்கியுள்ளனர். அமைப்பின் தலைவர் வசந்தராஜன் தலைமையில், இன்று (அக்.9) நவீன இயந்திரங்கள் கொண்டு குளத்தை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீ தா லீடர்ஸ் அமைப்பினர் கலந்துகொண்டு சீமை கருவேல மரங்களை அகற்றுதல், குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். இந்த குளத்தை முழுமையாக தூர்வாரி, கரைகளை பலப்படுத்தினால் மீண்டும் விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔