Settings

முகப்பு/அரசியல்/பாஜக முன்னாள் நிர்வாகி கருப்பு முருகானந்தம் மீது வழக்கு: ஆதரவாளர்கள் போராட்டம்
அரசியல்

பாஜக முன்னாள் நிர்வாகி கருப்பு முருகானந்தம் மீது வழக்கு: ஆதரவாளர்கள் போராட்டம்

🕒 23 அக்., 2026, 09:21 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பாஜக முன்னாள் நிர்வாகி கருப்பு முருகானந்தம் மீது வழக்கு: ஆதரவாளர்கள் போராட்டம்
✨

AI Highlights

  • •முத்துப்பேட்டையில் பாஜக முன்னாள் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையைக் கண்டித்து 400-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பாஜக முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையைக் கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக நிர்வாகி திவ்யா சேஷாத்திரி கடந்த மாதம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கருப்பு முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், அவரது குடும்பப் பெண்கள் மீது காவல்துறையினர் அத்துமீறுவதாகக் குற்றஞ்சாட்டியும், பெண்க உள்பட 400-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் முத்துப்பேட்டை பேரூராட்சி அருகில் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔