சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/வ.உ.சி. நினைவு நாள் அனுசரிப்பு: திருவுருவப் படத்திற்கு த.வெ.க.வினர் மலர் தூவி மரியாதை
அரசியல்

வ.உ.சி. நினைவு நாள் அனுசரிப்பு: திருவுருவப் படத்திற்கு த.வெ.க.வினர் மலர் தூவி மரியாதை

🕒 5 செப்., 2026, 11:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வ.உ.சி. நினைவு நாள் அனுசரிப்பு: திருவுருவப் படத்திற்கு த.வெ.க.வினர் மலர் தூவி மரியாதை

AI Highlights

  • பழனியில் வ.உ. சிதம்பரனார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. வ.உ.சி. பேருந்து நிலையத்தில் த.வெ.க. நிர்வாகிகள் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சுதந்திரப் போராட்ட வீரரும், ‘கப்பலோட்டிய தமிழன்’ என போற்றப்படுபவருமான வ.உ. சிதம்பரனாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி பழனி வ.உ.சி. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். பழனி பாலன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் வ.உ. சிதம்பரனாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது சுதந்திரப் போராட்டப் பணிகள் மற்றும் நாட்டின் விடுதலைக்காக அவர் செய்த தியாகங்கள் நினைவுகூரப்பட்டன.

பழனி நகர செயலாளர் மீதுன் உள்ளிட்ட தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நாட்டின் விடுதலைக்காக வ.உ. சிதம்பரனார் மேற்கொண்ட தியாகங்களையும், அவரது தேசப்பற்றையும் இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔