விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சிதான் என சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்த கேள்விக்கு மாணிக்கம் தாகூர் பதில்,இந்தியாவின் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக் கல்லூரியை அமைத்து மருத்துவப் படிப்பிற்கான இடத்தை அதிகப்படுத்தும் நோக்கிலும் அதே நேரத்தில் மருத்துவ படிப்பிற்கான தகுதி தேர்வும் இருக்க வேண்டும் என மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா (MCI) ஒரு திட்டமாக கொண்டு வந்தது. அதை அப்போதைய காங்கிரஸ் அரசு பரிசீலனை செய்து நிலைக் குழுவிற்கு பரிந்துரை செய்து ஆய்வு நடத்தி பின்னர் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு சட்டமாக மாற்றப்பட்டதுநீட் அமைக்கும்போது எல்லா கட்சிகளின் பார்வையும் இருந்தது அதிமுகவில் அப்போது தம்பிதுரை, செம்மலை உள்ளிட்ட 9 எம்.பி.,க்கள் இருந்தார்கள், அப்போது அவர்களிடம் நீட் வேண்டுமா வேண்டாமா என கருத்து கேட்கப்பட்டது அப்போது நீட் வேண்டாம் என்று யாருமே கருத்து தெரிவிக்கவில்லை நீட் ஒரு தரமான மருத்துவக் கல்வியை உருவாக்கும் ஏழை எளிய மக்களுக்கு நியாயமான முறையில் கல்வி கிடைக்கும், நன்கொடை இல்லாத சிஸ்டத்தை உருவாக்கும் என நினைத்தோம் நீட் தேர்வுக்கு மக்கள் எதிர்ப்பு இருந்ததால் காங்கிரஸ் அதை நடைமுறைப்படுத்தாமல் விட்டுவிட்டது ஆனால் 2016ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு சட்டமாக நிறைவேற்றி, நீட் தேர்வை நடைமுறைக்கு கொண்டு வந்தது 2017ம் ஆண்டு தமிழகத்தில் அனிதா என்ற மாணவி முதல் தற்கொலை செய்து கொண்டார் அப்போது முதல்வராக இருந்த இருந்த எடப்பாடி பழனிச்சாமி, 2016, 2017, 2018, 2019, 2020, 2021ம் ஆண்டுகளில் பேசாமல் தற்போது சட்டமன்றத்தில் பேசுவதாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிச்சாமி முன்னுக்குப்பின் முரணாக காங்கிரஸ் மீது பழி சுமத்துவதை விட்டுவிட்டு தான் முதல்வராக இருந்த போது என்ன நடந்தது என்பதை பார்க்க வேண்டும் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா நீட் வேண்டுமென்று கேட்டுக்கொண்டதால் காங்கிரஸ் அதை கொண்டு வந்தாலும் நிறைவேற்றவில்லை காங்கிரசை பொருத்தவரை காலுக்கு ஏற்ற காலனி இருக்க வேண்டும் என நினைக்கும் கட்சி, காலனிக்கு ஏற்ற கால் இருக்க வேண்டும் என நினைக்காத கட்சி புதிய மாற்றம் வரும்போது தவறு நடந்தால் அதை திரும்ப பெரும் தகுதியும், மனநிலையும் கொண்ட கட்சி காங்கிரஸ் கட்சி வீம்பு பிடித்துக் கொண்டு மோடி அரசு தாங்கள் கொண்டு வந்த சட்டம், நாங்கள் கொண்டு வந்த நீட் சரியாக இருக்கும் என நினைத்துக்கொண்டிருக்கிறார் தேசிய தேர்வு முகமை என்ற மோசடி ஏஜென்சிதான் நீட் குளறுபடிக்கு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் வினாத்தாள் கசிவு போன்ற அனைத்து அடிப்படை பிரச்சனைகளுக்கும் தேசிய தேர்வு முகமை தான் காரணம்தேசிய தேர்வு முகமை இந்தியாவில் தலைகுனிவை ஏற்படுத்துகிறதுஇத்தனை மாணவர்களின் தற்கொலைக்கு காரணமும் தேசிய தேர்வு முகமை தான்அதன் சிஸ்டத்தை மாற்ற வக்கில்லாதவர்கள் இத்தனை பேச்சு பேசிக்கொண்டிருக்கிறார்கள் நீட் வேண்டுமா? வேண்டாமா? என்பதை அந்தந்த மாநிலங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் நிலை எங்கு வந்து நிற்கிறது பாஜக மீண்டும் நீட் சட்டத்தை கொண்டு வரும்போது உடனிருந்து விளக்கு பிடித்தது யார்? பாஜக நீட் சட்டத்தை கொண்டு வந்த போது அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பொங்கி எழுந்திருக்க வேண்டாமா மாணவி அனிதாவின் மரணத்திற்கு பின் தமிழகமே பொங்கி எழுந்ததே அப்போது எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்து கொண்டிருந்தார் பழி போடுவது என்பது தவறான விஷயம் ஒரு மாற்றம் வரும் போது தவறு நடந்தால் அதை திருத்திக்கொள்வது அரசின் கடமை ஆனால் நீட் விவகாரத்தில் இவ்வளவு தவறு நடந்தும் மாற்றத்தை செய்ய மோடி அரசு தயாராக இல்லை, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என சொல்லிக்கொண்டுள்ளது நீட் தேர்வு குறித்து தேவையற்ற கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கும் மோடி அரசை எதிர்த்துப் பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு தில்லும் தைரியமும் உள்ளதா? நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என்றால் தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவை நிறைவேற்ற வாக்களிக்க மாட்டோம் என மோடியிடம் சொல்ல எடப்பாடி பழனிச்சாமியும், அன்புமணி ராமதாஸும் சொல்ல தைரியம் உள்ளதா?மோடி சொல்லும் அனைத்தையும் தமிழகத்தில் வந்து நியாயப்படுத்த எடப்பாடி பழனிச்சாமியும், அன்புமணி ராமதாசும் தயாராக உள்ளார்கள் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழகத்தில் மகளிருக்கு 59 சீட் கிடைக்கும், மகளிருக்கு 117 சீட் கிடைக்கும் என கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் பாஜக சொல்ல முடியாத காரணங்களை சொல்லக்கூடிய கட்சிகளாக அமித்சா-வின் அதிமுகவும் அன்புமணியின் பாமகவுமாக மாறியுள்ளது தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து தமிழக முதல்வரிடம் தான் கேட்க வேண்டும் 100 நாட்கள்தான் ஆகியுள்ளது, அனைவரும் புதிய அமைச்சர்களாக உள்ளார்கள், இளம் அமைச்சர்கள் செயல்பட கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் கர்நாடக வனத்துறை நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, அன்றைய தினமே கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளேன் சுட்டுக்கொலை செய்த அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். கர்நாடக அரசு 15 லட்சம் ரூபாய் நிவாரணமும், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுதவறு செய்த அதிகாரிகள் தப்பித்து சென்று விடக்கூடாதுதுப்பாக்கி கையில் இருப்பது என்பதற்காக தவறு செய்தவர்களை சுட்டுக் கொள்வது என்பது மனிதாபிமானமற்ற செயல் தவெக அமைச்சர்கள் கமிஷன், லஞ்சம் கேட்பது தொடர்பான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு, அண்ணாமலை ஆடியோ திருடும் வேலையை இன்னும் விடவில்லை போல, பாஜகவில் இருக்கும் போதும் ஆடியோ ரிக்கார்டு செய்வது, ஆடியோ ரிக்கார்டு செய்ய ஒரு குரூப்பை இறக்கிவிட்டு பாஜகவில் கிளப்பிவிட்டதால் பல தலைகள் உருண்டது, இந்த பழக்கத்தை அண்ணாமலை கைவிட வேண்டும்அண்ணாமலை ஒரு அரசியல் தலைவராக நடந்து கொள்ள வேண்டும் மற்றவர்கள் பேசுவதை ஆடியோ ரிக்கார்டு செய்து தன்னிடம் ரெக்கார்டு வைத்துள்ளேன் என சொல்வது புலனாய்வு செய்தியாளர்கள் வேண்டுமானால் அப்படி சொல்லலாம்ஒரு அரசியல்வாதியாக யார் குற்றம் செய்துள்ளார்கள், யார் பணம் வாங்கினார்கள், யார் ஊழலில் ஈடுபட்டுள்ளது என்பதை தெளிவாக சொல்லுங்கள் மிரட்டல் அரசியல் எத்தனை நாட்கள் நடக்கும், இது தவறான அணுகுமுறை, தமிழக மக்கள் இதனை விரும்புவதில்லை ரெக்கார்டு செய்யும் பழக்கத்தை பாஜகவோடு விட்டுவிட வேண்டும் அமைச்சர்கள் தவறு செய்தால் ஆதாரத்தோடு சொல்ல வேண்டும், ஊழல் லஞ்சத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என ஏற்கனவே முதல்வர் தெரிவித்துள்ளார் அண்ணாமலை பேசுவது நியாயமற்றது, அவரது பேச்சசு அரசியல் தலைவர்களின் பேச்சு கிடையாது தஞ்சையில் தன்னை தாக்கிய சிறப்பு சார்பு ஆய்வாளரை இளைஞர் திருப்பி தாக்கிய சம்பவம் குறித்த கேள்விக்கு காவலர்களை திருப்பி தாக்கினால் எந்த சிஸ்டமும் வேலையாகாது ஏதோ ஒரு இடத்தில் நடந்ததை அனைத்து இடங்களிலும் நடந்தது போன்று பார்க்க முடியாது சம்பந்தப்பட்ட இளைஞருக்கு சரியான கவுன்சிலிங் வழங்க வேண்டும், காவல்துறையினரும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய காலமாக உள்ளது இளைஞர் மீது இவ்வளவு பெரிய குற்றவாளக்கு பதிய வேண்டுமா என்பதை கவனமாக பார்க்க வேண்டியது சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறையின் கடமை என தெரிவித்தார் பேட்டி: மாணிக்கம் தாகூர் - பாராளுமன்ற உறுப்பினர் (விருதுநகர்)
அரசியல்
நீட் விவகாரம்: “அனிதா உயிரிழந்தபோது மௌனம்... இன்று அரசியலா?” – மாணிக்கம் தாகூர்
🕒 18 ஆக., 2026, 09:22 AM
⏱️ 4 நிமிடம் வாசிப்பு

