சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக மாரத்தான் போட்டி: தவெக மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை
அரசியல்

போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக மாரத்தான் போட்டி: தவெக மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை

🕒 18 ஆக., 2026, 04:45 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக மாரத்தான் போட்டி: தவெக மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகத்தின் பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ​இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட 100 நாள் சாதனைகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சாதனைகளை விளக்கும் வகையில் மாவட்டத்தில் இரண்டு பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை நடத்துவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 100 நாள் சாதனையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். ​கூட்டத்திற்குப் பின் திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் மரிய ஜான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வருகின்ற ஆகஸ்ட் 23-ஆம் தேதி திருநெல்வேலியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரம்மாண்டமான மாரத்தான் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். போதை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கும் மாரத்தான் நிகழ்வில் ஐந்து அமைச்சர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க உள்ளதாகக் கூறினார். ​தொடர்ந்து கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசிய அவர், விரைவில் பாளையங்கோட்டை பகுதியில் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 15,000 பேர் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் மாபெரும் சேர்க்கை விழா நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார். இந்த பிரம்மாண்ட இணைப்பு விழாவில் கட்சியின் தலைவர் விஜய் நேரில் பங்கேற்று புதிய நிர்வாகிகளை வாழ்த்த அழைப்பு விடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ​இறுதியாக, நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதோ அல்லது காவல் துறையில் புகார் அளிப்பதோ தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த மரிய ஜான், இதுகுறித்து தலைமை இடத்திலிருந்து இதுவரை எந்தவித உத்தரவும் வரவில்லை என்றும், தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வரும் பட்சத்தில் அதற்கு ஏற்றாற்போல் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெளிவுபடுத்தினார்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔