திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, சில மாதங்களுக்கு முன்பு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனிடையே, ராஜினாமா செய்த பதவியை மீண்டும் வழங்கக் கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் அவர் மனு அளித்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில், “அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக தொண்டர்கள்” என்ற பெயரில், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இசக்கி சுப்பையாவுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், “ஊரே சிரிக்குது உன்னை பார்த்து... அம்பை தொகுதி மக்களின் தீர்ப்பை மதிக்காத ஓடுகாலி இசக்கி சுப்பையாவே... உனக்கு மீண்டும் எம்.எல்.ஏ. பதவி ஒரு கேடா?” என கடுமையான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் அதிமுகவினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல்
முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவுக்கு எதிராக நெல்லை முழுவதும் போஸ்டர்கள்
🕒 3 செப்., 2026, 07:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

