அரசியல்
அரியலூர் ; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் மாற்றம் வர வேண்டும் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
🕒 25 அக்., 2026, 09:44 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
*அரியலூர் ; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் மாற்றம் வர வேண்டும் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி*
அரியலூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் மாற்றம் வர வேண்டும்
குற்றச் செயல்களை குறைக்கும் வகையில் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். குழந்தை காணாமல் போய் 15 நாட்களாகி விட்டது. குழந்தை உள்ளதா இல்லையா எனவே தெரியவில்லை. இதில் காவல்துறை மிகப்பெரிய சவாலை சந்தித்துள்ளார்கள்
கடந்த ஆட்சியைப் பற்றி குறை சொல்வதை விட்டுவிட்டு தற்போது உள்ள பிரச்சனைகளை தீர்க்க தவெக அரசு முன்வர வேண்டும்
ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களில் மாற்றம் வந்துள்ளதா இல்லையா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும்
மின்வெட்டு விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்
