அரசியல்
ஈரோடு மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகை குறித்து பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர் என் ஆனந்த் ஆய்வு
🕒 25 அக்., 2026, 12:33 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
ஈரோடு . . . .
தமிழக முதல்வர் விஜய் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகை தருவது குறித்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார் . . .
வரும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அன்று தமிழக முதல்வர் விஜய் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகை தர உள்ளார்.
இதற்காக பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பிரம்மாண்ட அரங்கத்தை அமைச்சர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகன், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சத்தியபாமா, பெருந்துறை சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயக்குமார் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்,
முதல்வர் வருகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் முதலமைச்சர் அலுவலகத்தின் வாயிலாக தெரிவிக்கப்படும் என்று கூறினார் .
விஜய் ரோடு ஷோவில் பங்கேற்கிறாரா,
ஹெலிகாப்டரில் வருகிறாரா போன்ற பதில்களுக்கு அமைச்சர் ஆனந்த் பதிலளிக்கும் போது, அனைத்து தகவல்களும் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்....
