Settings

முகப்பு/அரசியல்/கோவை ரேஸ்கோர்ஸ்: கலாம் பிறந்தநாளில் பசுமை நலத்திட்டங்கள்!
அரசியல்

கோவை ரேஸ்கோர்ஸ்: கலாம் பிறந்தநாளில் பசுமை நலத்திட்டங்கள்!

🕒 15 அக்., 2026, 07:01 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோவை ரேஸ்கோர்ஸ்: கலாம் பிறந்தநாளில் பசுமை நலத்திட்டங்கள்!
✨

AI Highlights

  • •கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் அப்துல் கலாம் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடுதல், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் நடைபாதை திறப்பு விழா நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதை வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் மரம் நடும் விழா, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா உள்ளிட்ட நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, FRIENDS WALKING CLUB WELFARE SOCIETY மற்றும் ஆத்ம ரக்க்ஷா அறக்கட்டளை இணைந்து, ரேஸ்கோர்ஸ் வாக்கிங் குரூப் நண்பர்களின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன.

இதன் ஒரு பகுதியாக மரம் நடும் நிகழ்ச்சி, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு மற்றும் எட்டு வடிவிலான நடைபயிற்சிப் பாதை திறப்பு ஆகியவை நடைபெற்றன.

சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், பொதுமக்களுக்குத் தூய்மையான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பசுமையான சூழலை உருவாக்குவதுடன், நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களின் உடல்நலத்தை மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நலத்திட்டங்களுக்கு நடைபயிற்சி மேற்கொள்பவர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

மரம் வளர்ப்போம்! சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்! ஆரோக்கியமான வாழ்வை உருவாக்குவோம்!

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔