Settings

முகப்பு/அரசியல்/பிரதமர் மோடியின் 25 ஆண்டு சேவை போற்றப்பட்டு பாஜக சார்பில் சேவா ஜோதி யாத்திரை!
அரசியல்

பிரதமர் மோடியின் 25 ஆண்டு சேவை போற்றப்பட்டு பாஜக சார்பில் சேவா ஜோதி யாத்திரை!

🕒 7 அக்., 2026, 09:33 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பிரதமர் மோடியின் 25 ஆண்டு சேவை போற்றப்பட்டு பாஜக சார்பில் சேவா ஜோதி யாத்திரை!
✨

AI Highlights

  • •பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை போற்றும் வகையில் விருதுநகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவா ஜோதி யாத்திரை பேரணி நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை போற்றும் வகையில், பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் மாவட்ட பாஜக சார்பில் 'சேவா ஜோதி யாத்திரை' பேரணி நடைபெற்றது.

நாடு முழுவதும் பாஜக சார்பில் நடைபெற்று வரும் இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக, விருதுநகரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக, மத்திய அரசு பொதுமக்களுக்காக செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வையிடும் வகையில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் எல்இடி திரைகள் மூலம் இந்நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது.

பாஜகவின் விருதுநகர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் தினேஷ் ராஜா மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சியினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, தேசபந்து மைதானத்தில் இருந்து ஜோதி ஏந்தியவாறு 200-க்கும் மேற்பட்டோர் பேரணியாகப் புறப்பட்டனர்.

இந்தச் சேவா ஜோதி யாத்திரையானது தேசபந்து மைதானத்தில் தொடங்கி, விருதுநகர் மெயின் பஜார், தெப்பக்குளம் வழியாக நகராட்சி அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. இ்ப்பேரணியில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔