அரசியல்
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி தான் இருப்பார் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் திட்டவட்டம்
🕒 25 அக்., 2026, 09:07 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் வருகை தந்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் ஜெயபிரகாஷ் ஹெக்டே ஆகியோர் எஸ்.ஐ.ஆர் தொடர்பாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பேசுகையில்
"வாக்கை காப்போம்; நாட்டை காப்போம்" என்ற தலைப்பில் இந்தியா கூட்டணி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இந்தியா என்பது ஜனநாயக கட்டமைப்பு அடியோடு இழந்து விடக்கூடாது என்றும் மோடி அரசின் கைப்பாவையாக இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.தொடர்ந்து பேசிய அவர் தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக வைத்துக்கொண்டு பாஜக பல மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் குளறுபடியால் அரசியல் அமைப்பு சட்டம் தகர்க்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ள ஞானேஷ்குமாரை தேர்தல் ஆணையராக நியமித்தது தவறு.எனவே அவர் பதவி விலக வேண்டும்.
எஸ்.ஐ.ஆர் எதிரான கூட்டத்தில் தவெக கலந்துகொண்டது.எஸ்ஐஆர்க்கு எதிரான போராட்டத்தில் தவெக அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளதாகவும்
தமிழகத்தில் பல கட்சிகள் விழிப்புடன் இருந்ததால் சில தவறுகள் நடைபெறவில்லை.
எஸ்ஐஆர் விவகாரத்தில் மக்கள் பக்கம் காங்கிரஸ் நிற்கிறது. மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி தான் இருப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் ராஜேஷ்குமார்
தங்களின் முகம் ராகுல்காந்தி என்றும் அவரை வைத்து தான் இந்தியாவை காக்க முடியும் என்றும் பேசினார்.மேலும்
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு வந்த பிறகு பார்க்கலாம். தமிழகத்தில் தவெக அரசாங்கம் வந்து 5 மாதங்கள் தான் ஆகியுள்ளது.இதற்குள் பல கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.அதற்குள் குற்றம்சாட்டக்கூடாது. பூத் அளவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
