Settings

முகப்பு/செய்திகள்/திருட்டு நாடகம் அம்பலம்! 33 பவுன் நகையை கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்கிய மனைவி - அதிர்ச்சி பின்னணி!
செய்திகள்

திருட்டு நாடகம் அம்பலம்! 33 பவுன் நகையை கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்கிய மனைவி - அதிர்ச்சி பின்னணி!

🕒 12 அக்., 2026, 12:17 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
திருட்டு நாடகம் அம்பலம்! 33 பவுன் நகையை கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்கிய மனைவி - அதிர்ச்சி பின்னணி!
✨

AI Highlights

  • •நெல்லையில் பாத்திர வியாபாரி வீட்டில் 33 பவுன் நகை திருடுபோன சம்பவத்தில் பாத்திரவியாபாரி மனைவியே நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தனது ஆண் நண்பரிடம் கொடுத்து செலவு செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனை அடுத்து பாத்திர வியாபாரி மனைவி மற்றும் அவரின் ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை டவுன் வ உ சி தெருவை சேர்ந்தவர் பாலகுருசாமி பாத்திர வியாபாரி. இவரது மனைவி ரேவதி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. பாலகுருசாமி கோவில் திருவிழாவில் பாத்திரம வியாபாரம் செய்வதற்காக கடந்த வாரம் சங்கரன்கோவில் அருகே உள்ள தென்மலைக்கு சென்றுள்ளார் அப்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளையும் தென்மலையில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு அழைத்துச் சென்றதால் வீடு பூட்டப்பட்டிருந்தது வியாபாரம் முடிந்து குடும்பத்தினருடன் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்ட 33 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது மேலும் தடயங்களை மறைக்க வீட்டில் மர்ம நபர் மிளகாய் பொடி தூய்விட்டுச் சென்ற அடையாளங்களும் இருந்தன. இதுகுறித்து பாலகுருசாமி அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் தடய நிபுணர்களும் ஆய்வு செய்தபோது கைரேகை உள்ளிட்ட தடயங்களையும் மறைக்க அவர்கள் மிளகாய் பொடியை வீசி சென்றிருக்கலாம் என கருத்திய போலீசார் நகை திருடியது யார் என விசாரணை நடத்தினர் அதே நேரத்தில் வீட்டின் வெளிக்கதவு பூட்டு மட்டும் உடைக்கப்பட்டு இருந்த நிலையில் பீரோவின் கதவு உடைக்கப்படாமல் சாவியால் திறக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் வீட்டில் உள்ளவர்களின் உதவி இல்லாமல் சாவியை எடுத்து பீரோவை திறந்து நகைகளை கொள்ளையடிக்க வாய்ப்பு இல்லை என்ற சந்தேகத்தின் பேரில் போலீசா தீவிர விசாரணையில் இறங்கினர் இதில் பாலகுருசாமியின் மனைவி ரேவதியின் செல்போன் அழைப்பு விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை செய்ததில் அவருக்கு பழக்கமான நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நவநீதகிருஷ்ணன் என்பவர் குறித்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது இதை எடுத்து போலீசார் நவநீதகிருஷ்ணனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் பாலகுருசாமி மனைவி ரேவதி குழந்தைகளை பள்ளியில் விட செல்லும்போது ஆட்டோ டிரைவர் நவநீதகிருஷ்ணனிடம் அறிமுகம் ஏற்பட்டு அந்த அறிமுகம் நாளடைவில் விதியை மீறிய உறவாக மாறியதாக கூறப்படுகிறது இதனை அடுத்து சுமார் 4 மாதங்களுக்கு முன்பு இருந்தே ரேவதி கணவருக்கு தெரியாமல் நகைகளை அவரிடம் கொடுத்ததாகவும் அதை பணமாக்கி இருவரும் சேர்ந்து சொகுசாக செலவு செய்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மோசடி வழக்காக பதிவு செய்த டவுன் போலீசார் பாத்திர வியாபாரியின் மனைவி ரேவதியையும் கைது செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔