நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கல்லிடைக்குறிச்சி அகத்தியர் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் (52). அம்பாசமுத்திரம் எம்எல்ஏ அலுவலகம் முன்பு இவருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த நிலையில் கல்லிடைக்குறிச்சி குத்துக்கல் தெருவில் தனது மகளை டியூஷன் கொண்டு போய் விட்டுவிட்டு மீண்டும் அழைத்து வரச் சென்ற நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் கண்ணனை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து கண்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் அம்பாசமுத்திரம் காவல்துறை கண்காணிப்பாளர் கணேஷ் குமார் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கல்லிடைக்குறிச்சி போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்தும் கொலைக்கான காரணம் சொத்துத் தகராறா அல்லது முன் விரோதமா என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முதற்கட்டமாக மூன்று பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் கண்ணனை பின்தொடர்ந்து வந்து வெட்டி கொலை செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் தப்பிச்சென்ற மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர்..
செய்திகள்
கல்லிடைக்குறிச்சியில் திருமண மண்டப உரிமையாளர் வெட்டிக்கொலை; மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் வெறிச்செயல்
🕒 10 செப்., 2026, 10:02 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •கல்லிடைக்குறிச்சியில் திருமண மண்டப உரிமையாளர் வெட்டிக்கொலை; மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் வெறிச்செயல்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
