விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கினை மேம்படுத்துவது குறித்த பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, விளையாட்டு அரங்கத்தின் தற்போதைய கட்டமைப்பு வசதிகள், மைதானத்தின் தரம் மற்றும் வீரர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்து அவர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, மண்டல நிர்வாகப் பொறியாளர் ராஜேஷ் கண்ணன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் நாராயணன், நகராட்சிப் பொறியாளர் புவனேஷ்வரி மற்றும் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.









